Perambalur: A resolution was passed at the VCK meeting to publicly auction the lands and shops belonging to the Venganur Siva temple!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கிருஷ்ணாபுரம் சமுதாய கூடத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. மகளிர் விடுதலை இயக்கத்தின் ஒன்றிய செயலாளர் ராசாத்தி வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர் வெற்றிவேல், ம.வி.இ ஒன்றிய துணை செயலாளர்கள் ரம்யா, வனிதா இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வேர்களைத் தேடி பயணம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் நடத்துவது, வெங்கனூர் சிவன் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கடைகளை பொது மக்கள் பயன்பெறும் வகையில் பொது ஏலம் விடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையை கேட்டுக் கொள்வது, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தலைவர் தொல். திருமாளவனுக்கு நன்றியை தெரிவிப்பது, வெண்பாவூர் கிராமத்தில் ஆதிதிராவிட சமூக மக்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிலத்தில் கிருஷ்ணாபுரம் மற்றும் வெங்கலம் கிராமத்தில் உள்ள நிலமற்ற ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க வேண்டுமெனவும், தழுதாழை கிராமத்தில் ஜன. 26 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் சிலை, படிப்பகம் அடிக்கல் நாட்டும் விழா நடத்துவது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படடது.
முன்னாள் மண்டல செயலாளர் கிட்டு, மண்டல செயலாளர் ஸ்டாலின், செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் சா.மன்னர் மன்னன், இ.ச.பே மாநில துணைச் செயலாளர் ராசிக் அலி, ம.வி.இ மாநில துணைச் செயலாளர் செல்வம்பாள், மு.மா.க மாவட்ட அமைப்பாளர் அய்யம்பெருமாள், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் பழனிவேல் ராஜன் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.