Perambalur: A student who went to bathe in a well with friends drowned right before their eyes! A call has been made for the government to provide free swimming lessons to students from underprivileged backgrounds.
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் – பாளையம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் மனோஜ் (17). பெரம்பலூரில் தனியார் பாலிடெக்னிக்கில் DME முதல் ஆண்டு படித்து வந்தார். மனோஜ், இவரது தம்பி அரவிந்த் உள்பட 5 பேர் இன்று விடுமுறை என்பதால் மதியம் கிணற்றில் குளிக்க முடிவு செய்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அல்லாபிச்சை என்பவரது கிணற்றில் குளித்தனர். ஆனால், சிறுவர்கள் 5 பேருக்கும் நீச்சல் தெரியாது. இதில் மனோஜ், அவரது தம்பி மற்றும் நண்பர்கள் கண் முன்னே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மனோஜின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயிற்றை கட்டி, வாயை கட்டி ஏழை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்து வருகின்றனர். நீச்சல் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் சிறுவர்கள் கிணறுகளுக்கு செல்வதால் இது போன்ற விரும்பத்தகாத துக்க சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனை தடுக்க அரசு ஏழை எளிய மாணவ – மாணவியர்களுக்கு இலவசமாக அரசின் மாவட்ட விளையாட்டு உள்ள அரங்கில் நீச்சல் குளத்தில் கட்டணமின்றி நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்-க்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.