பெரம்பலூர்: கொளக்காநத்தத்தில் ரூ. 6.78 கோடியில் துணை மின்நிலையம்; அமைச்சர் சிவசங்கர் பணிகளை தொடங்கி வைத்தார்!

schedule
2026-02-08 | 00:18h
update
2026-02-08 | 00:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A substation at Kolakkanatham at a cost of Rs. 6.78 crore; Minister Sivashankar inaugurated the works!

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் ஊராட்சியில், புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் 33 / 11 kv திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கும் பணியை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்

Advertisement

கலெக்டர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், ஆலத்தூர் முன்னாள் யு_னியன் சேர்மனும், திமுக ஒன்றிய செயலாளருமான ந.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூத்தூர், புதுக்குறிச்சி மற்றும் கூடலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெற்று வரும் கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி, சாத்தனூர், சா.குடிக்காடு, இலுப்பைக்குடி, கூடலூர். கொட்டரை. ஆதனூர், பெரியம்மாபாளையம், கரம்பியம் மற்றும் மூங்கில்பாடி மின் பகிர்மானங்களில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழில் துறை பயன்பாட்டாளர்களுக்கு தரமான மற்றும் நிலையான மின்சார சேவை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு வந்ததை நிவர்த்தி செய்யும் வகையில் சுமார் 8,000 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் இந்த துணை மின்நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடையற்ற மின்சார சேவை வழங்கப்படுவதுடன் மின் அழுத்தக் குறைபாடுகளுக்கு முழுமையாக தீர்வு காணப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மின்வாரியம், ஊராக வளர்ச்சி, வருவாய்துறை, போக்குவரத்து துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 09:27:18
Privacy-Data & cookie usage: