பெரம்பலூர்: குடும்பத் தகராறில், வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை!

schedule
2024-02-21 | 06:35h
update
2024-02-21 | 06:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A teenager committed suicide by hanging himself in a family dispute!

பெரம்பலூர் அண்ணா புதிய பேருந்து நிலையம், அருகே உள்ள மூர்த்தி என்பவரது வயலில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்து போனதாக வந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில், இறந்தவர் பெரம்பலூர் அண்ணா பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த யோகேந்திரன் (40) என்பது தெரிய வந்தது.

Advertisement

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில். கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை அகதிகள் முகாதில் குடியிருந்து வரும் யோகேந்திரன் பெரம்பலூர் அண்ணா பேருந்து நிலையம் அருகில் மாலை நேரங்களில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு காசினி (34) மனைவியும், பிரகாஷினி (17) சுரேந்தர் (14) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், யோகேந்திரனுக்கு மனைவி காசினியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் கடந்த 5 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்த யோகேந்திரன் முகாமிற்கு அருகில் இருந்த மூர்த்தி என்பவரது வயலில் இருந்த பாதாம் மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது எவரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுவிட்டார்களா? என்ற கோணத்திலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 17:21:56
Privacy-Data & cookie usage: