பெரம்பலூர்: திருமணத்திற்கு சென்ற வேன் சின்னாறு அருகே கவிழ்ந்து விபத்து! 20 பேர் காயம்!

schedule
2025-11-30 | 03:47h
update
2025-11-30 | 04:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A van going to a wedding overturned near Chinnaru and caused an accident! 20 people injured!

கரூர் மாவட்டத்தில் நடக்கும் உறவினர் திருமணத்திற்காக சுமார் 20 பேர் வேன் ஒன்றில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து கரூருக்கு வேன் ஒன்றில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். வேனை சென்னை ஆவடி ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சிவ கணேஷ் (42) என்பவர் ஓட்டி வந்தார் . வேன் காலை சுமார் 5.45 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சின்னாறு பாலகட்டையில் மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் வேனில் வந்த முத்து மகன் வசந்தகுமார் (28), சிங்காரம் மனைவி சின்னம்மாள் வயசு (70) ராமலிங்கம் மனைவி மல்லிகா வயசு (67) கிருஷ்ணன் மனைவி மாரியாயி (57) சந்தர் மகன் முருகன் (36) தர்மலிங்க மனைவி சுப்புலட்சுமி (56) சண்முகம் மனைவி மணிமேகலை (42) வெங்கடேஷ் மகன் நிஷாந்த் (13) மணி மகன் கதிர்வேல் (32) கதிர்வேல் மனைவி விஜயா (25) வெங்கடேஷ் மனைவி பிரியா (36) சிவ கணேஷ் மனைவி நதியா (33) மணி மனைவி அஞ்சலம் (57) சுகுமார் மனைவி மோகனா (40) சிவ கணேஷ் மகன் கோகுல் (15) சிவநாதன் மகன் வெங்கடேஷ் ( 38) விஸ்வநாதன் மகன் நவீன் குமார் (33) வெங்கடேஷ் மகன் தர்ஷன் (10) விசுவநாதன் மனைவி சாவித்திரி (55) இவர்கள் அனைவருக்கும் கை கால்கள் தலை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. விபத்தில் சிக்கியவர்கள் கூக்குரலிட்டனர். இது குறித்த தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி செய்து பாதுகாப்பாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை போலீசார் அதனை சீர் செய்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.08.2026 - 07:49:54
Privacy-Data & cookie usage: