பெரம்பலூர்: குன்னத்தில், சவுமியா அன்புமணி தலைமையில் மகளிர் உரிமை மீட்பு பயணம்!

schedule
2025-12-30 | 19:27h
update
2025-12-30 | 19:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A women’s rights awareness march, led by Sowmiya Anbumani,

பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி கிராமத்தில் மகளிர் உரிமை மீட்பு பயணம் தொடர்பாக பாமக சார்பில் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. முன்னாள் பாமக மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் உலக .சாமிதுரை. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் சமட்டிகுப்பம் ஆறுமுகம், மாநில துணை தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

பசுமை தாயகம் முனைவர் சவுமியா அன்புமணி தலைமையில் குன்னம் தொகுதியில் வரும் 6-1-2026 அன்று நடைபெறும் இந்த மகளிர் உரிமை மீட்பு பயணமானது மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும், சுமார் 5,000 பெண்கள் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள், மற்றும் மாநில, மாவட்ட ,ஒன்றிய பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 07:46:53
Privacy-Data & cookie usage: