Perambalur: A young man died of electrocution while digging a septic tank for his house!
பெரம்பலூர் மாவட்டம், து.களத்தூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பு மகன் பிரபு (33). இவர் தனியார் பேக்கரியில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு சுமார் 7 மணி அளவில் அவர் புதிதாக கட்டி வரும் கலைஞரின் கனவு இல்லம் வீட்டிற்கு செப்டிக் டேங்க் பறிப்பதற்காக அருகே மின்சாரத்தை எடுத்து வேலை செய்து வந்துள்ளார். அப்போது, ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு உயிருக்கு போராடிய நிலையில், அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து துடித்து கொண்டிருந்த அவரை மீட்டு, முதலுதவி செய்து துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பிரபு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.