பெரம்பலூர்: கடல் கடந்து சொந்த ஊருக்கு திரும்பிய வாலிபர்; சாலையை கடக்கும் போது கார் மோதி பலி!

schedule
2025-11-11 | 08:10h
update
2025-11-13 | 14:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A young man who returned to his hometown across the sea was hit by a car while crossing the road and died!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணிகண்டன் (30). இவரது மனைவி பரமேஸ்வரி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இவர் மாலத்தீவில் வேலை செய்து வந்தார். நேற்று சொந்த ஊர் வருவதற்காக விமான மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் வந்து பேருந்தில் இறங்கினார். இவரது வருகைக்காக அவருடைய தந்தை பைக்கில் காத்திருந்தார். பின்னர், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி போது எதிர்பாராவிதமாக கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் செல்வராஜ் ஓட்டி வந்த பைக் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை மகன் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செல்வராஜை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி சாலையில் இறந்து கிடந்த மணிகண்டனை பார்த்த அவரது தாய் மற்றும் மனைவி, குழந்தைகள் கதறி அழுத சம்பவம் காண்போரை கலக்கமடைய செய்தது. பாடாலூர் கிராமத்தில் இருந்து தெரணி கிராமம் ஓரீரு கிலோ மீட்டர்கள் தூரம் உள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து கடல் கடந்து வந்த வாலிபர் சாலையை கடந்து வீடுசேருவதற்கு முன்பு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்ததை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 08:13:46
Privacy-Data & cookie usage: