பெரம்பலூர்: அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய வாலிபர் கைது!

schedule
2025-04-19 | 20:46h
update
2025-04-19 | 20:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: A youth arrested for stealing sand in a cow car without government permission

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாட்டு வண்டியில் மணல் திருடப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் மற்றும் அவரது குழுவினர் கீழப்பெரம்பலூர் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டு வந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெரமலை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ரகுவரன் (27) என்பவரிடம் இருந்து, 3/4 யூனிட் மணல் மற்றும் மாட்டுவண்டியும், பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், நீதி மன்றத்தில், ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

சட்ட விரோத மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 19:08:16
Privacy-Data & cookie usage: