பெரம்பலூர்: வாக்கு எண்ணும் மையம் அமைக்க ஆதவ் பள்ளி தேர்வு? மீண்டும் இடித்து நாசப்படுத்த அதிகாரிகள் ஆய்வு!

schedule
2025-12-10 | 16:20h
update
2025-12-10 | 18:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Aadhav school selected for vote counting centre? Officials inspect to demolish and destroy again!

பெரம்பலூர் மாவட்டத்தில் 147-பெரம்பலூர் (தனி) மற்றும் 148-குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான காப்பறைகள், தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடக மையம் உள்ளிட்ட வசதிகளை அமைப்பதற்கு தேவையான அறைகள் உள்ளதா எனவும், போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என பெரம்பலூர் பைபாசில் உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ந.மிருணாளினி, போலீஸ் எஸ்.பிஆதர்ஷ் பசேரா இன்று ஆய்வு செய்தனர்.

Advertisement

மேலும், வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரும் வாகனங்கள் முறையாக உள்ளே வந்து வெளியேறுவதற்கு ஏதுவான வழிகள் இருக்கின்றதா என்பது குறித்தும் பார்வையிட்டும் ஆய்வு செய்தனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மு.அனிதா (பெரம்பலூர்), சக்திவேல் (குன்னம்), துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேலுசாமி, வட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன் (பெரம்பலூர்), அருளானந்தம் (தேர்தல் பிரிவு) மற்றும் பலர் உடனிருந்தனர்.

ஆனால், கடந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஆதவன் பள்ளியில் நடைபெற்றது. அப்போது, தேர்தல் ஆணையம் செய்த சேதங்களை இது வரை அந்த பள்ளிக்கு சீர் செய்து தரவில்லை. மேலும், அந்த பள்ளி பெரும் முயற்சியில் பொருளாதாரம் முதலீடு செய்து கடன் வாங்கி பார்த்து பார்த்து கட்டிய கட்டிடத்தை படு மோசமாக சேதப்படுத்தி சென்றனர். அதோடு மட்டும் அல்லாமல், அந்த பள்ளியின் சேர்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனவே, இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் அடக்குமுறைகளை கைவிட்டு, கடந்த ஆண்டு குரும்பலூர் அரசு கல்லுரியிலும், வேப்பூர் அரசு கல்லூரிகளிலும் நடத்தியே போன்ற நடத்த வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்து தனியார் நிறுவனங்களை பாழ்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதை மாற்றிக் கொள்ளவேண்டும் என போதுமக்களும், சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர். எந்த கட்சியிலும் சேராமல் இருக்கும் பள்ளிக்கு இப்படி சோதனையா பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நடத்தினால் மட்டும் போதாது, கொடுத்த வாக்கையும் காப்பாற்ற வேண்டும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 23:05:41
Privacy-Data & cookie usage: