Perambalur: Aadi Krithigai; Abhishekam for Lord Murugan! Maha Deeparadhana!!
பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு உற்சவர், மற்றும் மூலவர்களுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து முருகப் பெருமானுக்கு வெள்ளி கிரீடம் மற்றும் வெள்ளி வேல் சாற்றி மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தார். முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜமாணிக்கம், வரதராஜ பூபதி மற்றும் தின,வார வழிபாட்டு சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு முருகன் பாடல்களை பாடி முருகன் அருள் பெற்றனர்.