பெரம்பலூர் : மாவட்ட கிராம இளைஞர்களுக்கு இலவசமாக, ஏசி, பிரிட்ஜ் பழுது நீக்கி, பராமரிக்கும் பயிற்சி!

schedule
2024-07-30 | 15:16h
update
2024-07-30 | 15:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: AC, Fridge repair and maintenance training for district village youth for free!

ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆனந்தி விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஏசி, பிரிட்ஜ் பழுது நீக்கி பராமரித்தல் பயிற்சி வரும் 12.08.2024 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

Advertisement

30 நாட்கள் இப்பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 07.08.2024 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்யவும்.

மேலும், விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், முதல் தளம் சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ் எளம்பலூர் சாலை என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, என்ற எண்ணிலோ +91 84890 65899, +91 94888 40328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 04:11:51
Privacy-Data & cookie usage: