Perambalur: Accident involving an unidentified vehicle; unknown person killed!
பெரம்பலூர் மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவளக்குறிச்சி பிரிவு சாலை அருகே நேற்றிரவு அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும், செல்போன் டவர் என்ட்ரிகளை வைத்தும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய வாகனத்தை தீவிரமாக அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.