பெரம்பலூர்: விபத்து; அடுத்தடுத்து லாரி, பஸ்கள், கார் மோதல்; 6 பேர் காயம்!

schedule
2026-09-06 | 08:17h
update
2026-09-06 | 08:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Accident; Truck, bus, car collision in succession; 6 people injured!

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருகே இன்று காலை முன்னே சென்ற லாரி தீடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் அடுத்தடுத்து வந்த ஆம்னி பஸ்கள், கார் ஆகிய மூன்றும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

Advertisement

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியில் தனியார் கல்லூரிக்கு அருகே முன்னால் திருச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத லாரி திடீரென பிரேக் பிடித்ததால், அதன் பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்சின் முன்பகுதி மோதியது. இதில் 5 பேர் காயமடைந்தனர். இந்த ஆம்னி பஸ்சை தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு ஆம்னி பஸ்சும், ஆம்னி பஸ்சின் பின்னால் மோதியது. இதோ ஆம்னி பஸ்சை தொடர்ந்து பின்னால் வந்த காரும் ஆம்னி பஸ்சில் மோதி விபத்துக்குள்ளாகி சேதமடைந்தன. இதில் காரை டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.09.2026 - 08:46:31
Privacy-Data & cookie usage: