பெரம்பலூர் அருகே கார் மோதியதில் வாலிபர் பலி

டிரைவர் கைது

schedule
2016-10-13 | 01:49h
update
2026-06-27 | 20:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகேயுள்ள சின்னாறு அருகே திருச்சியில் இருந்து சென்னை சென்ற கார் மோதியதில் வாலிபர் பலியானர்,

மங்களமேடு அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி இவரது மகன் செந்தில்குமார் (வயது 34). இவர் திருமணம் ஆகாத வாலிபர். சம்பவத்தன்று அவரது சொந்த ஊரில் இருந்து அலுவல் காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பலியானர்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலிஸ் இன்ஸ்பெக்டர் (பொ) தங்கவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பலியான செந்தில்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து ஏற்படுத்திய காரின் டிரைவர் திண்டிவனத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 20:38:31
Privacy-Data & cookie usage: