Perambalur: Advertising banners in the municipality must be displayed only after obtaining permission; Collector’s order!
பெரம்பலூர் நகருக்கு, மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதி பொது மக்கள் அன்றாட தேவைகளுக்காக, பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துமனைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கும், வெளியூர் செல்ல பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நகருக்கு வருகைபுரிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நகரில் பெரும்பாலான பகுதிகளில் விளம்பர பதாகைகள் அங்காங்கே அதாவது நகரின் மையப்பகுதியான பாலக்கரை ரவுண்டானா, மாவட்ட ஆட்சியர் செல்லும் வாயில், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மையப்பகுதி ஆகிய பகுதிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் உள்ளதுடன் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, நகரப் பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைப்பதினை தவிர்க்குமாறும், விளம்பர பதாகைகள் வைக்க அவசியம் இருப்பின் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற்ற பிறகே வைக்கப்பட வேண்டும். மேலும், அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பதாகைகளை தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் விதிகள், 2023–ன் பிரிவுகள் 117-O மற்றும் 117-P ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.