பெரம்பலூர்: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர், போலீஸ் எஸ்.பி-யிடம் புகார்! 7ம் தேதி விசாரிப்பதாக உறுதி!

schedule
2026-05-01 | 17:25h
update
2026-05-01 | 17:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Advocate Files Complaint with SP, Demanding Action Against Police Personnel; SP Assures Inquiry on the 7th!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தமிழ்வேந்தன். நேற்று மாலை இவர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அருகே வெங்கடாஜலபதி நகருக்குள் செல்லும் பாதையில் பெரம்பலூர் போக்குவரத்து போலீசாரின் ஜுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நின்றுக் கொண்டிருந்ததாகவும், அதை நகர்த்தக் கோரியும், வழக்கறிஞர் தமிழ்வேந்தன் போலீஸ் ஜுப்பில் இருந்த டிரைவரிடம் தெரிவித்தாகவும், அதற்கு அவர் மரியாதைக் குறைவாகவும், தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும், தமிழ்வேந்தன் தான் ஒரு வழக்கறிஞர் என்றும் தெரிவித்த பின்னரும், தரம் தாழ்ந்து பேசியதாகவும், அப்போது அங்கு வந்த போக்குவரத்து ஆய்வாளரிடம் இது குறித்து தெரிவித்த போது, அவரும் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தக் கூடிய போலீசாரே தரக்குறைவாக நடந்து கொண்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்றும், எந்த வித கெட்ட பழக்கமும் என்னை மது அருந்தி இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தினார்கள், நான் மது அருந்தவில்லை என்று கூறியதுடன், என்னைப் பரிசோதிக்குமாறு கூறினேன். அப்போது எனது அண்ணன் அங்கு வந்து அவர்களை கேள்வி கேட்டதால் அவர்கள் அங்கிருந்து விரைவாக புறப்பட்டு சென்றுவிட்டனர். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டியதற்காக என்னை ஒரு குற்றவாளியை போல அவர்கள் நடத்திய விதம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

புகார் மனுவை ஸ்பெசல் பிரான்ச் இன்ஸ்பெக்டர் சண்முகபிரியா மூலம் பெற்றுக் கொண்ட போலீஸ் எஸ்.பி பிரபாகர், அவர், வரும் மே. 7 -ம் தேதி இது குறித்து விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தார். அதன் பேரில் வழக்கறிஞர் திரும்ப சென்றுவிட்டார். இச்சம்பவம் நகராட்சி முன்புறம் உள்ள இரவு கடைகள் முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 17:43:13
Privacy-Data & cookie usage: