பெரம்பலூர்: 47 ஆண்டுகளுக்கு பிறகு, அரசு பஸ்சில் கண்டக்டர் பணியில் 2 பெண்கள்!

schedule
2026-05-22 | 08:21h
update
2026-05-22 | 08:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: After 47 Years, Two Women Serve as Conductors on a Government Bus!

Woman / Lady Govt Bus Conductor Narmatha

Deepa_Conductor_Govt_Bus_Perambalur

Advertisement

பெரம்பலூரில் கடந்த 1977ம் ஆண்டு ராம் தியேட்டர் அருகே எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அரசு போக்குவரத்து கழகத்திற்கான பணிமனை தொடங்கப்பட்டு, பின்னர் துறைமங்கலம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 47 ஆண்டுகளாக பெண்கள் எவரும் ஓட்டுனர்களாகவோ, நடத்துனர்களாகவோ பணி செய்ய முன்வரவில்லை. ஆண்களே நடத்துனர்களாகவும், ஓட்டுனர்களாகவும் பணியாற்றி வந்தனர். ஆண்களே திணரும் இந்த போக்குவரத்து பணியில் இரவு பகல் ஷிப்டில் வேலை செய்து களைத்தும், பயணிகளிடம் பேசிப்பேசி அலுத்தும் விடுவார்கள்.

இந்நிலையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு, நடத்துனர்கள் பணிக்கு 2 பெண்கள் வந்துள்ளனர். அதில், ஒருவர் பெரம்பலூர் தீரன் நகரை சேர்ந்த நர்மதா (28), மற்றொருவர் பூலாம்பாடியை சேர்ந்த தீபா (20). நர்மதா பி.எஸ்.சி பேசன் டெக்னாலாஜி படித்துள்ளார். தீபா பி.ஏ., வரலாறு படித்துள்ளார். இருவரும் அவர்கள் குடும்பத்தில் பணியின் போது இறந்து விட்டதால், கருணை (வாரிசு) அடிப்படையில் வேலைக்கு வந்துள்ளனர். இருவரும் திருச்சி பெரம்பலூர் சென்று வரும் ஒரே பஸ்சில் ஷிப்ட் முறையில் மாறி மாறி வேலை செய்து வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் பெண்கள் நடத்துனர்களாக பல ஆண்டுகளுக்கு முன்பே பணிக்கு வந்திருந்தாலும், முற்போக்கு சிந்தனையுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் இந்த பணிக்கு வர 47 ஆண்டுகளாகி உள்ளது. முன்னுதார நடத்துனர்களாக பணியாற்றும் நர்மதா, தீபா இருவரையும் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து பயணிக்கின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுனர் பணிக்காக பெரம்பலூரை சேர்ந்த ராணி என்பவர் அரசு பஸ்சில் கண்டக்ராக பணியாற்ற முயற்சி செய்து தனியார் மினி பேருந்தில் கண்டக்டராக பணி செய்தார். பின் நாட்களில் மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அவருடை பெரும் முயற்சி தோல்வியடைந்தது. அதனால், அவர் தொடர்ந்து வேலை கிடைக்காத காரணத்தினால் போலீஸ் ஊர்க்காவல் படைக்கு சென்றுவிட்டார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.05.2026 - 09:20:00
Privacy-Data & cookie usage: