Perambalur: Agricultural college students visited and inspected the grape cultivation!
பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தில் நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவியர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், மாணவியர்கள் அ.அபிதாரணி, ரா.அபிநயா, வீ.அன்னலட்சுமி, தோ.அந்தோனியம்மாள், ம. பாமா, ரா. தீபிகா, மு. தேவிகா மற்றும் சே. திவ்யதர்ஷினி திராட்சை சாகுபடி தொடர்பான கள ஆய்வு செய்தனர். இதில் திராட்சை பயிரிடும் முறை, பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி கள அனுபவம் கண்டனர்.
திராட்சை தோட்டத்தில் பயன்படுத்தப்படும் நடவு முறை, தாங்கு கட்டமைப்பு , நீர்ப்பாசன முறை, உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு ஆகியவை குறித்து விவசாயி பெருமாள் விளக்கமாக எடுத்துரைத்தார். குறிப்பாக, சொட்டு நீர் பாசனம், உயிர் உரங்கள் பயன்பாடு, இயற்கை முறையிலான நோய் கட்டுப்பாடு போன்ற நடைமுறைகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. சாகுபடியில் வரும் சவால்கள், செலவீனம், விளைச்சல் திறன் மற்றும் சந்தைப்படுத்தல் முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.