Perambalur: Ahead of the Tamil Nadu Assembly elections, the District Collector has ordered the closure of all firecracker shops and warehouses.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கிவரும் அனைத்து வெடிப்பொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிப்பொருள் கிட்டங்கிகள் ஆகியவை வாக்குபதிவினை முன்னிட்டு 21.04.2026 முதல் 24.04.2026 வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு 02.05.2026 முதல் 04.05.2026 வரை மூடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெடிபொருள் சட்டம் 1884-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் அனைத்து வெடிப்பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் வெடிப்பொருள் கிட்டங்கிகள் ஆகியவை வாக்குபதிவினை முன்னிட்டு21.04.2026 முதல் 24.04.2026 வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்று நடைபெறுவதையொட்டி 02.05.2026 முதல் 04.05.2026 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட நாட்களில் வெடிப்பொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிப்பொருள் கிட்டங்கிகள் ஆகியவை செயல்படுவது கண்டறியப்பட்டால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.