பெரம்பலூர்: குன்னம் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சரண்யா வேட்பு மனு தாக்கல்!

schedule
2026-04-04 | 18:17h
update
2026-04-04 | 18:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: AIADMK Alliance Candidate Saranya Files Nomination Papers in Kunnam Constituency!

Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணியில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்யா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் வேட்பாளர் சரண்யா இன்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பைச் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில், சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சக்திவேலிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது கணவர் அன்பழகன் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் துணை சபாநாயகர் ஆ.அருணாச்சலம், அதிமுக பிரமுகர் சித்தளி நாகராஜன், சரண்யாவின் கணவரும், ஐஜேகே மாவட்டத் தலைவருமான அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் தே.ஜ. கூட்டணியை சேர்ந்த கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2026 - 14:51:26
Privacy-Data & cookie usage: