பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் ஆர்.தமிழ்ச்செல்வனுக்கு, ஆதரித்து ஆர்.டி.ஆர். பிரச்சாரம்

schedule
2021-04-03 | 18:54h
update
2021-04-03 | 18:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur AIADMK candidate Campaign

பெரம்பலூர் அதிமுக தொகுதி வேட்பாளராக 3 வது முறையாக களம் காணும், ஆர்.தமிழச்செல்வன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக உள்ளிட்ட தனது கட்சியினருடன் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். முதலில் வெண்பாவூரில் தொடங்கிய அவர் பெரியவடகரை, பாண்டகப்பாடி, மாவிலிங்கை, நெற்குணம், நூத்தப்பூர், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்க்குப்பை, என்.புதூர், சாத்தனவாடி, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். நெற்குணத்தில் இருந்து, பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.இராமச்சந்திரன் வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு, அதிமுக சாதனைகளை எடுத்துரைத்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது, மாவட்ட இணைச் செயலாளர் ராணி, வெங்கலம் ராஜேஸ்வரி, லட்சுமி, மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.சிவப்பிரகாசம், வெண்பாவூர் லோகநாதன், முன்னாள் சேர்மன் ஜெயலட்சுமி, எசனை பன்னீர் செல்வம், சுஜாதா உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும், கூட்டணி கட்சியாக பாமகவை சேர்ந்த கண்ணபிரான், வக்கீல் சத்தியசீலன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

முன்னாதாக வாக்கு சேகரிக்க வேட்பாளர் மற்றும் கட்சியினருக்கு, பெண்கள் ஆங்காங்கே ஆரத்தி எடுத்தும், வெற்றி திலமிட்டும், வாழ்த்தினர். கிராம கோயில்களில் சிறப்பு பூஜைகளும் பொதுமக்கள் நடத்தினர். ஊர் நுழைவு பகுதிகளில் மேளதாளங்கள், வேட்டு சத்தம் முழங்க சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2026 - 23:33:53
Privacy-Data & cookie usage: