பெரம்பலூர்: இரட்டை இலை சின்னத்திற்கு, 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்!

schedule
2026-04-10 | 22:10h
update
2026-04-10 | 22:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: AIADMK candidate Ilambai R. Tamizhselvan canvasses for votes—seeking the ‘Two Leaves’ symbol—among workers of the 100-day employment scheme!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன், இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களை நேரில் சந்தித்து, அதிமுக ஆட்சியில் மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு கோரினார். இந்த சந்திப்பில் பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தினமும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் ஆதரவு கோரி இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

Advertisement

பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அயிலூர், அ.குடிக்காடு, விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், புது நடுவலூர், மேட்டுர், வெள்ளனூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், புதுவேலூர், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, களரம்பட்டி, அம்மாபாளையம், கோனேரிபாளையம், கவுல்பாளையம் கிராமங்களில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கி துண்டு பிரசுரங்க வினியோக செய்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 16:40:33
Privacy-Data & cookie usage: