கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ நிதியுதவி

schedule
2019-05-30 | 07:27h
update
2019-05-30 | 07:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur AIADMK district secretary R.Ramachandran MLA Aid for students

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம், நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் இறந்து விட்டார். இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு சந்துரு, சந்தியா, சஞ்சய் என 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இந்நிலையில் ராஜகுமாரி விவசாய கூலிவேலை செய்து படிக்க வைத்து வந்தார். தற்போது சந்துரு கல்லூரியில் பி.ஏ வரலாறு திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க உள்ளார். சந்தியா பனிரெண்டாம் வகுப்பும், சஞ்சய் ஏழாம் வகுப்பும் தஞ்சையில் பயின்று வருகின்றனர். தற்போது நிலவி வரும், வறட்சியால் கூலி வேலை கிடைக்காமல் ராஜகுமாரி சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும், பிள்ளைகளின் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

Advertisement

இது குறித்து தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதை கேரளாவில் உடல்நிலை நலியுற்றதால், சிகிச்சை பெற்று வரும் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.ராமச்சந்திரன் நேற்று கவனித்தார். உடனடியாக அவருக்கு உதவும் படி தனது சொந்த நிதியினை ரூ.50 ஆயிரம் வழங்கி தன் உதவியாளர்கள் மூலம் கட்சியினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதிமுக கட்சியினர் உடனடியாக அந்த மாணவர்களையும், அவர்களின் தாயாரையும் வரவழைத்து பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் அலுவலகத்தில் இன்று காலை ரொக்கம் ரூ. 50 ஆயிரத்தை வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் என்.சிவபிரகாசம் வழங்கினார்.

அப்போது மாவட்ட அவைத் தலைவர் ஆர்.துரை மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணிச் செயலாளர் கோ.பெருமாள், பெரம்பலூர் நகர இளைஞரணி செயலாளார் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 11:47:43
Privacy-Data & cookie usage: