Perambalur : Alathur taluck retiree pensions are transferred to the Treasury in September Alathur Sub-Treasury
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு புதிய சார்நிலைக் கருவூலம் துவங்கப்பட்டு 01.08.2016 முதல் செயல்பட்டு வருகிறது மாவட்டக் கருவூலம் பெரம்பலூரில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களில் செட்டிகுளம், பாடாலூர், நக்கசேலம், கொளக்காநத்தம் ஆகிய ஊர்களில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் ஓய்வூதியம் செப்டம்பர் 2016 முதல் ஆலத்தூர் சார்நிலை கருவூலத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது என ஓய்வூதியதாரர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, மேற்கண்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஓய்வூதியதாரர்கள் இனி ஓய்வூதியம் தொடர்பான அனைத்து விபரங்களுக்கும் உதவி கருவூல அலுவலர், சார்நிலைக் கருவூலம், ஆலத்தூர் 04328 – 267455 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.