பெரம்பலூர்: குடும்பத் தகராறில் 3 பெண் குழந்தைகள், மனைவியை தவிக்கவிட்டு, விஷம் குடித்த மதுப்பிரியர் சாவு!

schedule
2025-04-22 | 15:40h
update
2025-04-22 | 15:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Alcoholic man dies after consuming poison, leaving his wife and 3 daughters in distress in a family dispute!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள மாவிலிங்கை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் செல்வராஜ் (50), இவருக்கு மனைவி செல்வியும், 3 மகள்களும் உள்ளனர். செல்வராஜ் கோயம்புத்தூரில் தங்கி மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார்.

Advertisement

கடந்த 4 நாட்களாக சொந்த ஊரான மாவிலிங்கை கிராமத்திற்கு வந்து இருந்தவர் தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதனால், மனைவி அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த செல்வராஜ், நேற்று மதியம் மதுபோதையில் அவரது வயல் காட்டில் பயிருக்கு அடிப்பதற்காக வைத்திருந்த விஷத்தை குடித்து உள்ளார்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர், அவரை முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சையின் போது பரிதாபமாக உயிிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 16:04:40
Privacy-Data & cookie usage: