பெரம்பலூர்: ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி 12ம் ஆண்டு விளையாட்டு விழா!

schedule
2026-08-22 | 15:38h
update
2026-08-22 | 15:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Almighty Vidyalaya Public School’s 12th Annual Sports Day!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 12 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சேர்மன் ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது, துணை சேர்மன் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் போலீஸ் டி.எஸ்.பி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலர் லதா கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் ஒலிம்பிக் விளக்கேற்றி அணி வகுப்பு மரியாதையுடன் விழாவை துவங்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கான தடை தாண்டி ஓட்டம்,100 மீட்டர் ஓட்டம்,4×100 மீட்டர் தொடர் ஓட்டம், போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் துணை முதல்வர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சேர் டிரில், பிம் பாம் ட்ரில், அம்பர்லா ட்ரில், யோகா டிரில் போன்ற பல்வேறு உடற்பயிற்சிகளையும் மாணவர்கள் செய்து காட்டினார். ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் விழாவை நடத்தினர். ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.08.2026 - 15:51:37
Privacy-Data & cookie usage: