பெரம்பலூர்: அம்பேத்கர் பிறந்த நாள்; சிலைக்கு மாலை அணித்து ஆ.ராசா எம்.பி மரியாதை!

schedule
2026-04-14 | 16:29h
update
2026-04-14 | 16:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Ambedkar’s Birthday — MP A. Raja Pays Tribute by Garlanding the Statue!

Advertisement

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா.எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு ஆ.ராசா.எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், வேட்பாளர் ஜெயலட்சுமி, உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார், பரிதி @ நீலமேகம், உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இதே போல, விசிக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் அம்பேத்கர் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 16:34:39
Privacy-Data & cookie usage: