பெரம்பலூர்: ஏரியில் மீன் பிடிக்க சென்ற ஆட்டோ டிரைவர் நீரில் மூழ்கி பலி!

schedule
2026-03-07 | 13:54h
update
2026-03-07 | 13:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: An auto driver who went fishing in the lake drowned and died!

பெரம்பலூர் துறைமங்கலம் பெரிய ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் டவுன் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்த நடத்திய விசாரணையில் இறந்தவர், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் நல்லுசாமி(45), ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று, நகிலன்(13), நாகேந்திரன்(9), என 2 மகன்கள் உள்ளனர் என்பதும்,

Advertisement

இதனிடையே உடல் நலக் குறைவால் ஜெயலட்சுமி உயிரிழந்ததால், மகன்கள் இருவரும் மேலப்புலியூர் கிராமத்தில் உள்ள ஜெயலட்சுமியின் பெற்றோர் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். மனைவி இறந்த கவலையில் தனியாக வசித்து வந்த நல்லுசாமி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் துறைமங்கலம் பெரிய ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, திடீரென வலிப்பு வந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள நீர் நிலையில், ஆட்டோ டிரைவர் சடலமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 01:09:00
Privacy-Data & cookie usage: