பெரம்பலூர்: வெவ்வேறு விபத்துகளில் முதியவர், வாலிபர் இருவர் பலி! போலீசார் விசாரணை!

schedule
2025-03-31 | 19:45h
update
2025-03-31 | 19:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: An elderly man and a young man died in separate accidents! Police investigating!

சாலையை கடக்க முயன்ற முதியவர் பைக் மோதி பலி!

பெரம்பலூர் அருகே உள்ள ஆலத்தூர்கேட் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (70). விவசாயி. இவர் செட்டிகுளம் பரிவு சாலையிலிருந்து எதிர் திசையில் உள்ள ஆலத்தூர்கேட் ஊருக்குள் செல்லும் சாலையை நேற்று முன்தினம் இரவு கடக்க முயன்றார். அப்போது பெரம்பலூரில் இருந்து திருச்சியை நோக்கி வந்த பைக் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பொன்னுசாமி மீது அதிவேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுசாமி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதே போல, சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி இவருடைய மகன் தனபால் (வயது 35). இவர், பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தில் தங்கி கம்பரசர் வாகனம் ஓட்டும் பணி செய்து வந்தார். நேற்று இரவு காரை பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது, தேனியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தனபால் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபதத்தில், சம்பவ இடத்திலேயே தனபால் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலத்தூர் கேட், மற்றும் காரை பிரிவு பகுதியில், அருகருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.06.2026 - 02:07:13
Privacy-Data & cookie usage: