Perambalur: An introductory meeting for new VCK office bearers was held, presided over by District Secretary Krishnakumar.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் கிழக்கு நகர செயலாளர் சரண்ராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிச்சை பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் அ.இ.அழகுமுத்து,
மாவட்ட துணை செயலாளர்கள் தங்க சண்முக சுந்தரம், வெற்றியழகன், இடி முழக்கம், சங்கீதா, கேட் மணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தழுதாழை பாலு, காட்டு ராஜா, பாக்கியராஜ் , மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல செயலாளர் ஸ்டாலின், மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல துணை செயலாளர் மன்னர் மன்னன், ம.வி.இ மாநில செயலாளர் செல்வாம்பாள், மு.மா.க மாநில துணைச் செயலாளர் அம்பேத் கோகுல் , மாநில துணை செயலாளர்கள் வழக்கறிஞர் அணி மணிமாறன் வணிகர் அணி 4ரோடு நடராஜன், சரவணன், க.பொ.வி.இ ஜான்சிராணி
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் மாஸ்மணி, மதியழகன், சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன், வடிவேல், பழனி முத்து, கவியரசன், வெற்றிவேல், வினோத், ரவிக்குமார், பேரூர் செயலாளர்கள் சுரேஷ்குமார், விஜயவர்மன் ஆகியோர் கலந்து பங்கேற்றனர்.
முன்னதாக புதிய பொறுப்பாளர்கள் அனைவரையும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அமைப்பாளர்கள் ஒன்றிய துணை அமைப்பாளர்கள், நகர பொருளாளர்,நகர அமைப்பாளர்கள், நகர துணை அமைப்பாளர் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மேற்கு நகர செயலாளர் தங்க. இளவரசன் நன்றி கூறினார்.