ரூ.10.40 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை பெரம்பலூர், குன்னம் எம்.எல்.ஏக்கள் வழங்கினர்

schedule
2017-10-16 | 19:43h
update
2017-10-18 | 19:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur and Kunnam MLAs offered sewing machines worth Rs 10.40 lakh

பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் வேப்பந்தட்டை, வேப்பூர், பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டாரங்களில் மழைநீர் சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்வடிப்பகுதியில் மேற்க்கொள்ளப்படும் பணியின் ஒரு அங்கமாக நீர்வடிப்பகுதியின் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.140 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தொகையில் தையல் இயந்திரம் 696 நபர்களுக்கு ரூ.45.24 இலட்சத்தில் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மேலும் ஆடு வளர்ப்பு 422 பயனாளிகளுக்கு ரூ50.64 இலட்சம், புறக்கடை கோழி வளர்ப்புக்கு 418 நபர்களுக்கு ரூ.22.99 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

வேப்பந்தட்டை வட்டாரத்தை சார்ந்த மலையாளப்பட்டி, வேப்பந்தட்டை, தொண்டமாந்துறை, உடும்பியம், தழுதாழை, வெங்கனூh;, பொpயம்மாபாளையம், பெரியவடகரை, கை.களத்தூர், காரியனூர் மற்றும் அய்யனார்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பயனாளிகள் 160 நபர்களுக்கு ரூ.10.40 இலட்சம் மதிப்புள்ள தையல் இயந்திரங்களையும், மேலும் தீவனப்புல் நொறுக்கும் இயந்திரம் 123 நபர்களுக்கு பெறப்பட்டு 3 பயனாளிகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்

இவ்விழாவில் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் அரசு பணியாளர்கள், நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 23:23:43
Privacy-Data & cookie usage: