பெரம்பலூர்: மதனகோபால் சாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்; எம்.எல்.ஏ சிவக்குமார் கலந்து கொண்டார்.

schedule
2026-05-20 | 20:04h
update
2026-05-20 | 20:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Andal’s celestial wedding celebrated at the Madhanagopal Swamy Temple; MLA Sivakumar participated.

பெரம்பலூர் மதனகோபால் சாமி கோவிலில் உய்யாளி சேவை, மாலை மாற்றுதல் நிகழ்ச்சியுடன் 8ம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது!

பெரம்பலூர் நகரில் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது, பஞ்சபாண்டவர்கள் பூஜித்து வழிபட்ட ஸ்தலமாக விளங்கும் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஆண்டாள் பக்தர்கள் பேரவை குழு சார்பில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடத்துவது வழக்கம். அதனை முன்னிட்டு இந்தாண்டு வைகாசி மாதமான இன்று 8ம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலை மூலவர்கள் பெருமாள் , தாயார் மற்றும் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, ஆண்டாள், உற்சவர்களுக்கும் பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவியங்கள், பழசாறு வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கும்ப கலசம் தீர்தம் சம்ரோஷனம் முடித்து மகாதீபாரதனை நடைபெற்றது இதனை தொடர்ந்து, மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Advertisement

இதில் உற்சவர் பெருமாள் உய்யாளி சேவை நடைபெற்றது தொடர்ந்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சி திருமாங்கல்ய தாரணத்துடன் திருக்கல்யானம் சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்கத்தர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு சாமி தரிசணம் செய்தனர். ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டுகளித்ததுடன் சாமிகளுக்கு மொய் மற்றும் பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமார், கோவில் செயல் அலுவலர் (பொ) அசனாம்பிகை, ஆண்டாள் பக்தர்கள் பேரவையை சேர்ந்த கே.ரமேஷ், திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி, டாக்டர் கருணாகரன், சண்முகம், முன்னாள் அறங்காவலர் தெ.பெ. வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், ராஜா ஸ்டோர் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஆண்டாள் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான பூஜைகளை பட்டாச்சாரியார்கள் பட்டாபி, சந்தான கோபால கிருஷ்ணன், விக்ரமன் குழுவினர் செய்து வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.05.2026 - 20:14:36
Privacy-Data & cookie usage: