Perambalur: Anna’s birthday; DMK members celebrated by garlanding his statue and cutting a cake.
முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனமான பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை கிராமங்களில் உள்ள அண்ணா சிலைகளுக்கு திமுகவினர் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அண்ணா பிறந்த நாளை கேக் வெட்டியும் கொண்டாடினர். அனைவருக்கும் கேக் துண்டுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
இதில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, வக்கீல் என். ராஜேந்திரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப. பரமேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் டி.சி.பாஸ்கர், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு நீலமேகம், நல்லதம்பி, ராஜேந்திரன், டாக்டர் வல்லபன், ஜெகதீஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர்கள் உறுப்பினர்கள் அண்ணாதுரை, இராமச்சந்திரன், முருகேசன்,
பேரூர் செயலாளர்கள் ரவிச்சந்திரன், செல்வலட்சுமி சேகர், மாவட்டமருத்துவர் அணித் தலைவர் ஜெயலட்சுமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்டஅமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் மணிவாசகம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பெரியம்மா பாளையம் ரமேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தங்கராசு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பரமசிவம், நகராட்சித் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், பேரூராட்சி தலைவர்கள் பூலாம்பாடி பாக்கியலட்சுமி செங்குட்டுவன், அரும்பாவூர் வள்ளியம்மை, மற்றும் ஏ.எம்.கே. கரிகாலன், சாத்தனவாடி துரை கிருஷ்ணா, வெங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், முன்னாள் வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரங்கராஜ், தம்பை தர்மராஜ், வாலிகண்டபுரம் அய்யாக்கண்ணு, கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் உளளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.