Perambalur: Anna’s birthday long-distance running competition: Collector, MLA flag off the event!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் மாராத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டியினை இன்று காலை கலெக்டர் ந.மிருணாளினி, போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்பட்ட இப்போட்டியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தொடங்கி பாலக்கரை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடையும் வகையில் நடத்தப்பட்டது.
நெடுந்தூர ஓட்டப்போட்டியில் வெற்றிப்பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- வீதமும் இரண்டாம் பரிசாக ரூ.3,000/- வீதமும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- வீதமும், நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/-வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான ஆணைகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் கலெக்டர், போலீஸ் எஸ்.பி, எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு வடிவேல் பிரபு, வருவாய் கோட்டச்சியர் அனிதா, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி, நகராட்சித் துணைத் செயலாளர் ஆதவன், போலீஸ் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.