பெரம்பலூர்: சட்ட தன்னார்வலர்கள் சேர்க்கை அறிவிப்பு!

schedule
2026-09-10 | 16:30h
update
2026-09-11 | 16:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Announcement on the recruitment of legal volunteers!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சத்தியமூர்த்தி விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர்கள்” (Para Legal Volunteers) தேர்வு செய்வதற்கு பெரம்பலூரை சார்ந்தவர்கள் மட்டும் கீழ்கண்ட பிரிவினர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றனர். விண்ணப்பங்கள் ஆசிரியர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்பட). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள். எம்.எஸ்.டபுள்யூ பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் வரை). சமூக சேவை புரியும் சமூக ஆர்வலர்கள் (அரசியல் அமைப்பு சாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள்). மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிர் குழுக்கள்.

Advertisement

விண்ணப்ப படிவங்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு. https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணைய வழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் ‘தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூர். என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமோ 18.09.2026 மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேற்கண்ட பணிக்கு சம்பளம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஏதும் கிடையாது. சேவை மணப்பாண்மை உள்ளவராக இருத்தல் வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.09.2026 - 20:32:03
Privacy-Data & cookie usage: