பெரம்பலூர்: அடுத்த ஏற்றம்; கூட்டுறவு பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்வு! டீ, காபி விலையும் உயரும் அச்சம்! தொடர் விலைவாசி ஏற்றத்தால் விழிபிதுங்கும் ஏழை எளிய மக்கள்!

schedule
2026-09-08 | 08:04h
update
2026-09-08 | 08:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Another hike—cooperative milk prices raised by ₹6 per litre! Fears arise that tea and coffee prices will also go up; the poor and downtrodden are reeling under the impact of continuous price rises!

தமிழகத்தில் சமீபத்தில் தான் 44 ரூபாயாக இருந்த சர்க்கரை ரூ. 72 ஆக உயர்ந்தது. இதே போல மறைமுகமாக டீத்தூள், காபித்தூள் என அனைத்து பொருட்களும் உயர்ந்த நிலையில், அடுத்த மாற்றமாக கிராம புறங்களில் கூட்டுறவு பால் கொள்முதல் மையங்களில் பொதுமக்களுக்கு விற்கப்படும் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாயில் இருந்து ரூ. 6 (14 சதவீதம்) உயர்த்தப்பட்டு நேற்று முதல் லிட்டர் ஒன்று சுமார் ரூ. 50 யாக விற்கப்படுகிறது. பண்டிகைள் ஏழைகள் மீது திணிக்கப்படும் வன்முறை போல விலைவாசி உயர்வும் வன்முறையாக கருத வேண்டி உள்ளது. எளிய மக்களின் வருமானத்தின் ஒரு பகுதியை சூறையாடும் சம்பவமாக விலைவாசி உயர்வு கருதப்படுகிறது. இதனால், ஏழை எளிய மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுப்பதில் கூடுதலாக செலவு செய்யவும், அடித்தட்டு ஏழை மக்கள் மாட்டுப்பாலை நோய் நொடியின் போது முக்கிய ஊட்டச்சத்தாக கருதி வாங்கி பருகிவருகின்றனர். இதிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கடந்த சில மாதங்களில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் கண்டு வரும் நிலையில் அடுத்து பொதுமக்கள் வாங்கும் பால் விலை ஏற்றமும் அடுத்த சுமையாக மக்களுக்கு மாறி உள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி கொடுத்ததற்கு இணையாக பால் விற்பனையில் மாற்றம் ஏற்படாத வகையில் மானியத்தை கொடுத்தார்கள். ஆனால், தற்போது ஆளும் தவெக அரசு நேரடியாக மக்களுக்கு சுமையை கொடுப்பதால் இது மக்களுக்கான ஆட்சியா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. மேலும், மொத்த மக்கள் தொகையில் உள்ள 2 சதவீத அரசு ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக கடைநிலை மக்களை விலைவாசி உயர்வு வாட்டுவது சிரமப்படுத்துவது வாக்களித்த மக்களை பெரும் வேதனை அடைய செய்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.09.2026 - 08:22:55
Privacy-Data & cookie usage: