Perambalur: Anti-corruption police conducted a surprise raid at the Alathur Union Office. They seized ₹10,000 in unaccounted cash and also inquired about UPI transactions.
தமிழகம் முழுவதும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தீடீர் ரெய்டு நடத்தினர். பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலத்தூர் யூனியன் ஆபீசை திடீரென முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ. 10 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், போன்களில் G Pay, Phone Pay போன்ற UPI பரிவர்த்தனைகளையும் சோதித்து அதனை விசாரணை நடத்தினர். உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனரா, அல்லது வாங்கியுள்ளனரா என்றும் ஆய்வு செய்தனர். இதனால், ஆலத்தூர் யூனியன் ஆபீஸ் மற்றும் தாலூக ஆபீசில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்த சோதனை இன்னும் முறையாக நிறைவு பெறவில்லை. இன்று இரவு சுமார் 9 மணிக்கு மேல்தான் முறையான அறிவிப்பில் தெரிய வரும் கூறப்படுகிறது.