Perambalur: Applications invited for new mini-bus routes; Collector announces.
பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பஸ் வசதி இல்லாமல் உள்ள தடங்களை கண்டறிந்து போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பஸ் புதிய விரிவான திட்டம் – 2024 வெளிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிற்றுந்து இயக்க 3 புதிய வழித்தடம் 23.09.2026 அன்று பெரம்பலூர் மாவட்ட அரசிதழில் (அரசிதழ் எண்:5 நாள்:23.09.2026) மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
கண்ணாப்பாடி பிரிவு முதல் செட்டிக்குளம் சிவன் கோயில் வரை, ரோவர் கல்லூரி (தண்ணீர் பந்தல்) முதல் செங்குணம் வரை, அ.குடிகாடு முதல் வாலிகண்டபுரம் பிள்ளையார்கோயில் வரை இந்த வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரும்புபவர்கள் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி 05.10.2026 -ற்குள் பரிவாகன் இணையதளம் வாயிலாக கட்டணம் ரூ.1500/- மற்றும் சேவைக்கட்டணம் ரூ.100/-மொத்தம் ரூ.1600/-செலுத்தி பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பெறப்படும் பட்சத்தில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இது தொடர்பான சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் நேரடியாக பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.