பெரம்பலூர்: பத்மவிபூசன், பத்மபூசன் பத்மஸ்ரீ விருது பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-07-25 | 15:52h
update
2026-07-25 | 15:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Applications invited for Padma Vibhushan, Padma Bhushan, and Padma Shri awards; Collector announces.

இந்திய அரசாங்கம் பத்மவிருது வழங்கிட அறிவித்துள்ளது. அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி ,தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2027 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் (பத்மவிபூசன், பத்மபூசன் மற்றும் பத்மஸ்ரீ) வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்யாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய மற்றும் விளையாட்டுக்களில் சாதனை புரிந்தவர்கள் https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 31.07.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமாறும் (இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்), விண்ணப்பித்தவுடன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை 7401703516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.07.2026 - 16:16:01
Privacy-Data & cookie usage: