தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2026-08-31 | 15:20h
update
2026-08-31 | 15:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Applications invited for Tamil Nadu Tourism Awards; Collector announces!


சுற்றுலாத் தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் சுற்றுலாத் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிற்கு சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர் , சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம் , சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலா பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம் -சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் போன்ற 13 வகையான விருதுகள் வழங்கப்படுகின்றன. எனவே, இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வருகின்ற 30.09.2026-க்குள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 15:29:28
Privacy-Data & cookie usage: