பெரம்பலூர்: தீபாவளி தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2024-10-01 | 08:02h
update
2024-10-01 | 08:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Apply for Diwali temporary firecracker shop licence; Collector Info!

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிகமாக உரிமை கோருவோர் புலம் 9 ச.மீ முதல் 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புலவரை படத்தில் சாலை வசதி, சுற்றுப்புறத்தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டு காட்டும் Rule – 83(3) புல வரைபடம். உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய இரசீது நகல். வாடகை கட்டிடம் எனில், உரிமையாளர் வீட்டு வரி செலுத்திய அசல் இரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம். உரிமத்திற்கான கட்டணம் ரூ.500/- அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலுத்து சீட்டு (Challan), மனுதாரரின் மார்பளவு பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் கார்டு / குடும்ப அட்டை / வாக்காளர் அடையாள அட்டை) ஆகியவற்றுடன் தங்களது விண்ணப்பத்தினை 20.10.2024க்குள் இ சேவை மையங்களில் இணையதளம் மூலமாக குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

மேலும், உரிய வழிமுறைகளை கடைபிடித்து விண்ணப்பிக்குமாறும், குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-இன் நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும், உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2026 - 03:20:12
Privacy-Data & cookie usage: