பெரம்பலூர்

அரியலூர் மாவட்ட மருத்துவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி

schedule
2017-10-21 | 16:20h
update
2017-11-15 | 12:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur – Ariyalur district doctors trained to treat dengue fever

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து மருத்துவர்களுக்கும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ரகுநந்தன் பயிற்சி அளித்தார்.

Advertisement

இன்று (21.10.2017) பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் , அரசு மருத்தவமனைகளின் மருத்துவ அலுவலர்கள் , தனியார் மருத்தவமனைகளின் மருத்துவர்கள் , தனலெட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆக 245 மருத்துவர்களுக்கு டெங்கு நோயின் அறிகுறிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது பற்றிய சிகிச்சை முறைகளை எடுத்துரைக்கப்பட்டது.

இதில் பெரம்பலூர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மோகன், இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட கொள்ளை நோய் மருத்துவர் அரவிந்தன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பரமணியன், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் அப்துல் சுபகான் மற்றும், நலப்பணியாளர் குணசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Ariyalur, Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.05.2026 - 00:36:29
Privacy-Data & cookie usage: