Perambalur – Ariyalur District Welfare Scheme Giving Ceremony! Chief Minister M.K.Stal’s visit; District Secretaries S.S.Sivasankar, Gunnam C. Rajendran Noice!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை ஒருங்கிணைந்து நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அரியலூர் மாவட்டம், செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரம் பகுதியில் நடைபெறுகிறது.

இது குறித்து, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும், அரியலூர் மாவட்டச் செயலாளருமான சா.சி.சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , வருகிற 28.11.2022 (திங்கட்கிழமை), 29.11.2022 (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தும், முடிவுற்ற பல்வேறு பணிகளை துவக்கி வைத்தும், தமிழக முதலமைச்சர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

28.11.2022(திங்கட்கிழமை), 11.00 மணியளவில், திருச்சியில் இருந்து கார் மூலம் பெரம்பலூர் மவட்டத்திற்கு வருகை தரும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு , பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூரில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்க, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள, மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள், பொதுமக்கள், தி.மு.க.தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அரியலூர் மாவட்டச் செயலாளர், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்- பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் ஆகிய இருவரும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!