அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பெரம்பலூர்

அரியலூர் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம்! மாவட்ட செயலாளர்கள் சா.சி.சிவசங்கர் – குன்னம் சி.இராஜேந்திரன் கூட்டறிக்கை!

schedule
2023-08-25 | 19:02h
update
2023-08-25 | 19:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur – Ariyalur district youth activists meeting under the leadership of Minister Udayanidhi Stalin! District Secretaries S.S. Sivasankar – Kunnam C. Rajendran joint statement!

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம், மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 28.08.2023 (திங்கட்கிழமை), மாலை 4.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் நடைபெறுகிறது. இது குறித்து, அரியலூர் மாவட்ட செயலாளரும் -போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் – பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

Advertisement

தமிழ்நாடு அரசின் முதலமைச்சர், திராவிட நாயகர், திமுக தலைவர் தளபதி அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட இளைஞர் அணியின் செயல் வீரர்கள் கூட்டம் கழகத்தின் முதன்மை அணியாம் இளைஞர் அணியினை எழுச்சியோடு வழிநடத்தி, கோடான கோடி இளைஞர்கள் நெஞ்சங்களில் இடம் பெற்று, தமிழ்நாட்டு இளைஞர்களின் விளையாட்டு மேம்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்து உலக அளவில் அவர்களை விளையாட்டுத் துறையில் மிளிர செய்து வரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 28.08.2023 (திங்கட்கிழமை) , மாலை 5.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறுகிறது.
இதில் கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.,- போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மணிப்பூரில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கலவரத்தில் பாதிப்புகள் ஏற்பட்டபோது அங்குள்ள விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கருதி, அவர்களுக்கு தமிழ்நாட்டில் விளையாட்டு பயிற்சி எடுத்துக் கொள்ள அழைத்து, பயிற்சி கொடுத்து இந்திய அளவில் அனைவரின் பாராட்டினையும் பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்கும் இந்த கூட்டத்தில், பெரம்பலூர் , அரியலூர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் உள்ள இளைஞரணி தம்பி மார்களை வெண்ணிற சீருடையில் தவறாமல் பங்கேற்று முழு ஒத்துழைப்பை வழங்கிடவும், கழகத்தின் அடலேறுகளாம் இளைஞர் அணியின் எழுச்சிமிக்க உடன்பிறப்புகள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட கழகச் செயலாளர்கள் சா.சி.சிவசங்கர், குன்னம் சி.இராஜேந்திரன் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 14:26:53
Privacy-Data & cookie usage: