Perambalur Ariyalur divisions to speed up public service, Perambalur Conference of Electrical Employees Central Organization Resolution Passed!


தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு பெரம்பலூர் வட்ட மாநாடு பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில், வட்ட தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமையில் நடந்தது.

துணைத்தலைவா; வி.தமிழ்செல்வன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் பி.நாராயணன், எஸ்.காசிநாதன், பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டத் துணைத் தலைவர் சி.இராஜகுமாரி வரவேற்றார். துணை செயலாளர் ஆர்.கண்ணன் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார்.

துவக்க உரை மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் வேலை அறிக்கையை வட்ட செயலாளர் எஸ்.பன்னீர்செல்வம், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் கே.கண்ணன் ஆகியேர் வாசித்தனர். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்.இராஜகுமாரன் வாழ்த்துரை வழங்கினார். மாநில செயலாளர் எஸ்.ஜோதி சிறப்புரை ஆற்றினார்.

மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், 2022 மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தையே தொடர வேண்டும், அலுவலக ஊழியர்களுக்கு தேவையான எழுது பொருட்களை மாதந்தோறும் தாமதமில்லாமல் தொடர்ந்து வழங்கி பணப் பயன்களையும் வழங்க வேண்டும்,

மின்வாரியத்திலுள்ள மொத்தம் 56 ஆயிரம் காலிப்பணியிடங்களில் 20 ஆயிரம் களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களையும் ஒப்பந்த ஊழியர்களையும் கொண்டும் நிரப்ப வேண்டும். கேங்மேன் பணியை கள உதவியாளராக மாற்றி அமைத்து சட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும்.

களப்பிரிவு ஊழியர்களுக்கு தளவாட சாமன்கள் தங்கு தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், பகுதிநேர பணியாளர்களை முழு நேர பணியமர்த்த வேண்டும்,

பெரம்பலூர் – அரியலூர் கோட்டங்களை பிரித்து மக்கள் சேவையை துரிதப்படுத்த வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. வட்ட துணைச் செயலாளர் எஸ்.நல்லுசாமி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!