பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெரம்பலூர் ஆயுதபடை பெண் போலீஸ்

schedule
2019-12-09 | 17:33h
update
2019-12-09 | 17:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur armed woman policeman who drank phenol and attempted suicide

பெரம்பலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ஆயுதபடையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம், சு.ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் திவ்யபிரியா (வயது 23). இவர் கடந்த 2017ம் ஆண்டு போலீஸ் பணிக்கு தேர்வான அவர், ஆயுதபடையில் காவலராக பணிபுரிந்து வரும் இவர் எளம்பலூரில் உள்ள ஆயுதபடை வளாக காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் திருமணமாகாத திவ்யபிரியா குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து நேற்று இரவு சுமார் 9மணியளவில் வீட்டிலிருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் திவ்யபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்த அவரது தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் சொத்து பிரச்சனை மற்றும் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து பினாயில் குடித்ததாக கூறப்படுகிறது. பெண் போலீஸ் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆயதப்படை மைதானத்தில் மனதை கட்டுப்படுத்தும் யோக வகுப்புகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 23:22:55
Privacy-Data & cookie usage: