Perambalur: Around 250 people joined TVK from other parties in the presence of MLA Sivakumar!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ரெட்டியார் அரங்கில் இன்று காலை எம்.எல்.ஏ சிவகுமார் முன்னிலையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள் தங்களை இணைத்து கொண்டனர்.
பெரம்பலூர் நகரம், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர், பெரம்பலூர் ஒன்றியங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட முக்கிய கட்சி பிரமுகர்கள் மாற்றுக் கட்சிகளான அதிமுக, முன்னாள் ஓபீஎஸ் அதிமுக அணி, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்டனர். அவர்களை பெரம்பலூர் நகர செயலாளர் வில்லுவிஜய் வரவேற்றார். தலைமை வகித்து பேசிய பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான சிவக்குமார் இணைத்துக் கொண்ட மாற்றுக் கட்சியினர் அனைவருக்கும் தவெக துண்டு அணித்து கட்சியில் இணைத்தார். பின்னர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பேபி காமராஜ், முன்னாள் கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், பெரம்பலூர் நகராட்சி 2வது வார்டு முன்னாள் வேட்பாளர் சுஜாதா, மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களமேடு, சின்னாறு, எறையூர், வெங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் இன்று காலை த.வெ கட்சியில் இணைந்தனர்.