பெரம்பலூர் அற்புதா மருத்துவமனை: இலவச சிறுநீரக கற்களுக்கான அறுவை சிகிச்சை முகாம்: நாளை நடக்கிறது!

schedule
2023-03-11 | 15:14h
update
2025-11-01 | 04:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Arputha Hospital: Free Kidney Stone Surgery Camp ; Happening Tomorrow!!

பெரம்பலூர் அற்புதா மருத்துவமனை மற்றும் பேராயர் பால்ராஜ் சமூக நல அறக்கட்டளை சார்பில், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 வரை, பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள அற்புதா மருத்துவமனையில் இலவச சிறப்பு சிறுநீரக கற்களுக்கான மருத்துவ பரிசோதனை, அறுவை சிகிச்சை முகாம், நடக்கிறது. முகாமில், சிறுநீர் கற்கள், சிறுநீர் குழாய் கற்கள், நீர்ப்பை கற்கள், நீர்த்தாரையில் அடைப்பு, தசை வளர்ச்சி ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அல்லை முதல் அடிவயிறு வரை வலி, சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல் மற்றும் வலி, சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுதல், இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால், முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன் பெறலாம், சிறப்பு சிறுநீரக அறுவை சிசிக்சை நிபுணர்கள் டாக்டர் சந்தோஷ், டாக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

அற்புதா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சாமுவேல் தேவகுமார், தலைமையில் நடக்கும் இம்முகாமில் கலந்து கொள்ளும், பொதுமக்களுக்கு , எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. மேலும், முகாமில் சிறுநீரக கற்களுக்கான அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 13:42:53
Privacy-Data & cookie usage: