Perambalur Arputhaa Medical Care hospital: TV and UPS donated to a home for mentally retarded children!
பெரம்பலூரில் செயல்பட்டு வரும் அற்புதா மருத்துவமனை, பேராயர் பால்ராஜ் அறக்கட்டளை மற்றும் குட் சமாரியன் சார்பில், திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஸ்பாஸ்டிக் சொசைட்டியைப் பார்வையிட்டு அங்கு பெருமூளை வாதம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய சுமார் 30 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியுறவும், அவர்கள் இருட்டில் தவிப்பதை தவிர்க்கவும் சுமார் ஒரு லட்சம் மதிப்பில் டிவி மற்றும் யு.பி.எஸ் பேட்டரிகள் கருவிகள் வழங்கப்பட்டது.
அங்கு அவர்கள் நலம் பெற சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்தும் அற்புதா மருத்துவமனை நிறுவனரும், மருத்துவ இயக்குநருமான டாக்டர் சாமுவேல் தேவக்குமார் விசாரித்து உரையாடினார். கேக்குகளையும் பகிர்ந்து அளித்தார். குழந்தைகள் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்தனர். அற்புதா மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் யோகேஷ் மற்றும் இல்ல நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.